எம்மை பற்றி

ஸ்தாபகரும், பிமல் இணை வியாபாரத்தின் தலைவருமான பீ.பி.எஸ். குமார அவர்கள் தனது வியாபார துறையில் புதிய மற்றும் ஆக்கத்திறன் கொண்ட மனதுடனும் நாட்டின் பொருளாதாரதிற்கு பங்களிக்கும் ஆளுமையும் கொண்ட தொழில் முயற்சியாளர்கள் வரிசையில் ஒருவராவார். மேலும் அவர் தனது வியாபாரத்தை மேம்படுத்த மற்றும் விரிவாக்கவும் அதேபோல் பிமல் கூட்டு வியாபாரத்தை நல்நிலைக்கு கொண்டுவரவும் அயராது உழைத்தவர்.


  • அவர் சமூகத்துக்கு தம்மால் இடம்பெற வேண்டிய பங்களிப்பை எப்போதும் வழங்குபவர்
  • அகில இலங்கை சாரதி பள்ளிகள் தேசிய சங்கத்தின் பிரதான ஏற்பாட்டாளர்,
  • சிம்ம சங்கத்தின், சி2 பன்னிபிட்டிய அங்கத்தவர்,
  • மகரகம வியாபார சங்கத்தின் அங்கத்துவ பணிப்பாளர்,
  • ஐக்கிய சகோதர கூட்டணியின் செயலாளர் மற்றும் இலங்கை காப்பீட்டு ஆலோசகர்


Bimal Group


2002 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பிமல் நிறுவனம் சாரதி பயிற்சி வழங்கும் முன்னணி நிறுவனமாகும். போட்டிமிக்க இச்சந்தையில் ஒரு தசாப்தத்துக்கும் அதிக காலம் மக்கள் நன்மதிப்பை பெற்ற சாரதி பயிற்சி பள்ளியாகும்.

பிமல் நிறுவனமானது ‘A’ தர சான்றிதல் பெற்ற சாரதி பயிற்சி பள்ளியாவதுடன், சிரேஷ்ட பயிற்சியாளர்களைக் கொண்ட குழாமை தன்னகம் கொண்டுள்ளது. பொறுப்புணர்வுடன் கூடிய பாதுகாப்பு விதிகளை சரிவர கடைபிடிக்கும் சாரதிகளின் சமூகத்துக்கு தனது பங்களிப்பை 2002 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகின்றது.

தற்போது இந்நிறுவனம் தனது சேவை வரையறைகளை மேம்படுத்திக்கொண்டு அதிக சேவைகளை வழங்கும் நிறுவனமாக உருபெற்றுள்ளது.

பிமல் கூட்டு நிறுவனமானது, பிமல் சுற்றுலா மற்றும் போக்குவரத்து சேவை, இலங்கை காப்பீட்டு நிறுவனத்தின் அனுமதிபெற்ற பிரதிநிதியாக நுகேகொட கிளையில் ஆலோசனை சேவையை வழங்குவதுடன், பிமல் வாடகை வாகன சேவை, வாகனங்கள் இழுத்தல் சேவை, வாகன சந்தை சேவை எனும் சேவைகளை வழங்கி வருகின்றது. மேலும் பெண் சாரதிகளைக் கொண்ட வாடகை வாகனச் சேவையை முன்னெடுக்கவுள்ளதுடன், இது இலங்கை வரலாற்றில் முதன் முறையாகும்.